SELANGOR

ஹிஜ்ரா நிதியுதவிக்கு இம்மாத இறுதியில் தீர்வு

8 ஜனவரி 2019, 9:25 AM
ஹிஜ்ரா நிதியுதவிக்கு இம்மாத இறுதியில் தீர்வு

ஷா ஆலம், ஜனவரி 8:

ஒத்திவைக்கப்பட்ட சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரிய நிதியுதவி நடவடிக்கைகள் விவகாரம் இம்மாத இறுதிக்குள் தீர்க்கப்படும்.

தங்கள் சிறு வர்த்தகத்தை நடுத்தர வர்த்தகமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட சிறு வணிகர்களுக்கு உதவுவதன் மூலம் மாநிலத்தில் காணப்படும் ஏழ்மை விவகாரத்திற்கும் தீர்வு காண்பதே ஹிஜ்ராவின் முதன்மை இலக்காகும் என்று அதன் நிர்வாகத் தலைவர் டதோ மன்சோர் ஓஸ்மான் கூறினார்.

“மாநில அரசாங்கம் இவ்விவகாரத்தை அறிந்துள்ளதோடு மந்திரி பெசார் அமிருடின் ஷாவும் இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.”

எனவே, ஹிஜ்ரா அமல்படுத்தும் மைக்ரோ கிரேடிட் திட்டம் வழி மாநிலத்தின் தொழில்முனைவோரை மேம்படுத்த மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது என்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.