SELANGOR

அகால மரணமுற்ற தியாகு சமுதாயத்திற்கு உதவும் கடப்பாட்டைக் கொண்டவர்.

8 ஜனவரி 2019, 4:26 AM

ஷா ஆலம், ஜனவரி 8:

கத்தியால் குத்தப்பட்டதால் நேற்று மாலை மரணமடைந்த ஷா ஆலம் கெ அடிலான் இளைஞர் அணி உறுப்பினர் தியாகு மாரிமுத்துவின் குடும்பத்தினருக்கு கோத்தா அங்கெரிக் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹாலிமி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

தியாகுவை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும் உதவி கோருபவருக்கு உதவிக் கரம் நீட்டுபவர் என்று டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கொடூரமான கொலைச் சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் விரைவில் கைது செய்வர் என்ற நம்பிக்கை தெரிவித்ததுடன் பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதரான தியாகு நீலாம் சாரி குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களுக்கு மிகுந்த ஆர்வத்துடன் உதவி வந்தார் என்றார் அவர்.

மறைந்த தியாகு, கெ அடிலானின் அர்ப்பணிப்புமிக்க உறுப்பினர் என்றும் அண்மையில் நடந்த கட்சி தேர்தலில் ஷா ஆலம் கிளையில் தமக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்றும் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.