SELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினராக கைரூடின் நியமனம்

10 டிசம்பர் 2018, 7:12 AM
ஆட்சிக்குழு உறுப்பினராக கைரூடின் நியமனம்

கிள்ளான், டிசம்பர் 10:

பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமட் கைரூடின் ஓத்மான் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

மாநில துணை சபாநாயகருமான அவர் மாநில சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

கடந்த 13வது பொதுத் தேர்தலில் அத்தொகுதியில் வெற்றி பெற்ற அவர் 14வது பொதுத் தேர்தலிலும் அத்தொகுதியை அவர் தற்காத்துக் கொண்டார்.

இதற்கு முன்னதாக கைரூடின் இளைஞர்,மலாய் பாரம்பரியம்,கல்வியல் சேமிப்பு வாரியம்,உட்கட்டமைப்பு துறை ஆட்சிக்குழுவின் உதவியாளராகவும் மாநில விளையாட்டு பேரவையின் துணைத்தலைவராகவும் அனுபவம் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.