SELANGOR

அனைத்து பள்ளிகளுக்கும் வெ.24 மில்லியன் ஒதுக்கீடு !!!

24 நவம்பர் 2018, 4:44 AM
அனைத்து பள்ளிகளுக்கும் வெ.24 மில்லியன் ஒதுக்கீடு !!!

ஷா ஆலம், நவம்பர் 23:

சிலாங்கூர் மாநில பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வரும் 2019ஆம் ஆண்டு பட்ஜெட்டில் வெ.24 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

அவற்றில் தேசிய பள்ளிகளுக்கு 100 மில்லியனும்,சீனப்பள்ளிகளுக்கு 6 மில்லியனும் தமிழ்ப்பள்ளிகளுக்கு 5 மில்லியனும் ஒதுக்கப்பட்ட நிலையில் தனியார் இடைநிலை சீனப்பள்ளிகளுக்கு 2 மில்லியனும் சமயப்பள்ளிகளுக்கு 1 மில்லியனும் ஒதுக்கப்பட்டதாக மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி குறிப்பிட்டார்.

மாணவர் எண்ணிக்கை அடிப்படையிலும் பள்ளிக்கூடங்களின் தேவைகள் மற்றும் அத்தியாவசியங்களின் அடிப்படையில் நிதி வழங்கப்படும் எனவும் பட்ஜெட் தாக்கலின் போது மந்திரி பெசார் விவரித்தார்.

கடந்த 2017 தொடங்கி பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெ.16 மில்லியனாக இருந்த வேளையில் அஃது 2019ஆம் ஆண்டில் வெ.22 மில்லியனாக உயர்ந்திருப்பதாக மந்திரி பெசார் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.