SELANGOR

வரவு செலவுத் திட்டம் '19: எம்பிஐ மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும்

24 நவம்பர் 2018, 3:21 AM
வரவு செலவுத் திட்டம் '19: எம்பிஐ மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும்
வரவு செலவுத் திட்டம் '19: எம்பிஐ மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும்

ஷா ஆலம், நவம்பர் 23:

மந்திரி பெசார் பெருநிறுவனம் (எம்பிஐ) 2019-இன் சிலாங்கூர் மாநில  வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மலிவு விலை வீடுகளை நிர்மாணிக்கும் பணியை திறம்பட முடிக்கும் என்று எம்பிஐ-இன் தலைமை செயல் அதிகாரி ராஜா ஷாரின் ராஜா ஓத்மான் நம்பிக்கை  தெரிவித்தார். மேற்கண்ட வீடமைப்பு திட்டங்களை செவ்வனே செயல் படுத்த சம்பந்தப் பட்ட ஊராட்சி மன்றங்கள் திட்டமிடல் ஒப்புதல் வழங்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"  எல்லா நிலங்களும் எம்பிஐ-க்கு சொந்தமானது. ஆகவே, வீடமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் பணியில் எந்த பிரச்சினையும் எழாது. தகுதியான வீடமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து மலிவு விலை வீடுகளை எம்பிஐ  நிர்மாணிக்கும்," என்று சிலாங்கூர் மாநில 2019-இன் வரவு செலவுத் திட்டத்தை மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி சட்ட மன்றத்தில் தாக்கல் செய்த பிறகு சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.