SELANGOR

பி40 வர்க்கத்திற்கு இலவச குடிநீர்

23 நவம்பர் 2018, 9:46 AM
பி40 வர்க்கத்திற்கு இலவச குடிநீர்

ஷா ஆலம், நவம்பர் 23:

சிலாங்கூர் மாநிலத்திற்கான 2019ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது இம்மாநிலத்தின் பி40 வர்க்கத்திற்கு இலவச குடிநீர் வழங்கப்படும் என மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

சாதாரண வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட 20 கன மீட்டரிலிருந்து 25 கன மீட்டராக உயர்த்தப்படுவதாக கூறிய அவர் பி 40 வர்க்கத்திற்கு மட்டும் இலவச குடிநீர் என்றார்.

தற்போது எல்லா நிலைகளில் உள்ள மக்களும் இந்த சலுகையை பெறுகிறார்கள்.இனி பி40 மக்கள் மட்டுமே பெறுவர் என்றார்.

இத்திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோரின் சுமையை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றார்.

இத்திட்டத்திற்காக அரசாங்கம் வெ.80 மில்லியனை ஒதுக்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.