SELANGOR

சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலுக்கு கெஅடிலான் தயார் நிலை !!

13 ஜூலை 2018, 2:25 AM
சுங்கை கண்டிஸ் இடைத்தேர்தலுக்கு  கெஅடிலான் தயார் நிலை !!

சுங்கை கண்டிஸ்,ஜூலை13:

சுங்கை கண்டிஸ் சட்டமன்றத்தின் இடைத்தேர்தலை எதிர்க்கொள்ள மாநில கெஅடிலான் தயார் நிலை இருபதாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து நிலையிலும் அதன் செயல்பாடுகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் தேர்தல் ஏந்திரம் தயார் நிலை இருப்பதாகவும் கூறிய மந்திரி பெசார் அமிரூடின் சாஹரி இது தொடர்பில் கோத்தா ராஜா கெஅடிலானுடன் கலந்துபேசி விட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும்,வேட்பாளர் குறித்த முடிவை தலைமைத்துவம் மேற்கொள்ளும் என்றும் அதன் முடிவை ஏற்றுக்கொண்டு வெற்றிக்கு துணைப்புரிவோம் என்றார்.

நடப்பில் அத்தொகுதி சார்ந்த கட்சி கிளைகளும் ஆதரவாளர்களும் இடைத்தேர்தலுக்கு தயாராகி விட்டதாக தெரிவித்த மந்திரி பெசார் வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாகவே தேர்தல் ஏந்திரம் முடக்கிவிடப்படும் என்றார்.

மேலும்,இடைத்தேர்தலை எதிர்க்கொள்ளும் யுக்தி மற்றும் வியூகம் குறித்தும் ஆராயபட்டு விட்ட நிலையில் இத்தொகுதியில் வெல்வது மிகவும் சாத்தியமானது என்றார்.

இத்தொகுதியில் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியதையும் மந்திரி பெசார் நினைவுக்கூர்ந்தார்.

கடந்த ஜூலை 2ஆம் தேதி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி சாஃபி மரணமுற்றதை தொடர்ந்து சுங்கை கண்டிஸ் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.