SELANGOR

சிலாங்கூர் சட்டசபை சபாநாயகர் தேர்வு தொடர்பில் தலைவர்கள் பேச்சுவார்த்தை?

21 ஜூன் 2018, 3:19 AM
சிலாங்கூர் சட்டசபை சபாநாயகர் தேர்வு தொடர்பில் தலைவர்கள் பேச்சுவார்த்தை?
சிலாங்கூர் சட்டசபை சபாநாயகர் தேர்வு தொடர்பில் தலைவர்கள் பேச்சுவார்த்தை?

ஷா ஆலாம், ஜூன் 21:

சிலாங்கூர் சட்டசபை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் வேட்பாளர்களை தேர்வு செய்ய மாநில அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். புதிய சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கு முன்பு இத்தேர்வு நடத்தப்படும் என்றார்.

"  அட்டவணைப்படி சிலாங்கூர் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜூன் 26 அன்று பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். ஆகவே, இதை முன்னிட்டு மாநில அரசாங்கம் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்," என்று மாநில மந்திரி பெசாரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.

 

 

 

 

 

 

இதனிடையே, தி ஸ்தார் வெளியிட்டுள்ள செய்தியில் பாயா ஜெராஸ் சட்ட மன்ற உறுப்பினர் முகமட் கைரூடின் மற்றும் செகிஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர் எங் சுவி லிம் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.