SELANGOR

மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இலவச பேருந்து சேவையை மேலும் சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும்!!!

13 ஜூன் 2018, 2:27 AM
மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இலவச பேருந்து சேவையை மேலும் சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும்!!!

சுபாங் ஜெயா, ஜூன் 13:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று மாநில ஊராட்சி, பொது போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் எங் ஸி ஹான் கூறினார். சிலாங்கூர் மாநிலத்தில் பொது போக்குவரத்து சேவையை சிறந்த நிலைக்கு கொண்டு வர தனியார் வாகனங்களை விட அதிகமான சேவையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இலவச பேருந்து சேவை அனைத்து வழிகளிலும் பொது மக்களுக்கு வழங்க தயாராக உள்ளதாக ஸி ஹான் கூறினார்.

"  புதிய போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ பூஃக் உடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி விட்டேன். பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்த அதிகமான இலவச பேருந்துகளை பல புதிய வழிகளில் சேவையை வழங்க முயற்சி செய்து வருகிறோம். ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை எல்லா சிலாங்கூர் வாழ் மக்களும் பயனடையும் வகையில் இருக்க வேண்டும்," என்று மேயர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுடன் நடைபெற்ற நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் சிலாங்கூர் இன்றுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.