SELANGOR

அஸ்மின்:மந்திரி பெசாரின் இறுதி பெயர் பட்டியல் அன்வாருடன் ஆய்வு?

2 ஜூன் 2018, 5:11 AM
அஸ்மின்:மந்திரி பெசாரின் இறுதி பெயர் பட்டியல் அன்வாருடன் ஆய்வு?

அம்பாங், ஜூன் 2:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு பதிலாக புதிய மந்திரி பெசார் பெயர் பட்டியல் ஆய்வு செய்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்மின் அலி கூறுகையில், கெஅடிலான் கட்சியின் தலைமை ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

" மந்திரி பெசார் பெயர் பட்டியல் ஆய்வு நேற்றிரவு கெஅடிலான் கட்சியின் தலைமை ஆலோசகருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அந்த வகையில் சிலரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு சிலாங்கூர் சுல்தானிடம் வழங்கப்படும்," என்று ஜமியூல் ஹூடா பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு  பேசினார்.

இதற்கு முன்பு, கட்சியின் தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அஸ்மின் அலி கூறினார். மந்திரி பெசார் பெயர் பட்டியலை பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் தலைமைத்துவத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று விவரித்தார்.

ஆனாலும் சிலாங்கூர் சுல்தானிடம் வழங்கப்படும் பெயர்களின் எண்ணிக்கையை அஸ்மின் அலி கூற மறுத்து விட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.