SELANGOR

சுல்தானை சந்தித்தார் அஸ்மின் அலி

20 மே 2018, 4:30 AM
சுல்தானை சந்தித்தார் அஸ்மின் அலி

ஷா ஆலாம்,மே20:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் விவகாரம் தொடர்பில் இன்று காலை 11.50 மணி அளவில் சுல்தான் சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவை சந்தித்தார்.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரான அஸ்மின் அலியை புதிய அமைச்சரவையில் பொருளாதார அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது தொடர்பில் தனது நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் அஸ்மின் அலி சுல்தானை சந்தித்ததாக நம்பப்படுகிறது.

அச்சந்திப்பின் போது தனது நிலைப்பாடு குறித்து டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சுல்தானிடம் எடுத்துரைத்தார்.

நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் புக்கிட் அந்தாராபங்சா தொகுதியில் வென்று கடந்த 11ஆம் தேதி மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.