SELANGOR

புதன் கிழமை முதல் ஆட்சிக்குழு கூட்டம்!!

14 மே 2018, 2:15 AM
புதன் கிழமை முதல் ஆட்சிக்குழு கூட்டம்!!

ஷா  ஆலாம்,மே14:

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவின் முதல் கூட்டம் வரும் புதன்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இன்று மாநில ஆட்சிகுழு உறுப்பினர்கள் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்ட பின்னர் அதன் முதல் கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

இன்று அனைத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்ட போதிலும் அவர்களுக்கான பொறுப்புகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும் மந்திரி பெசார் கூறினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் மாநில சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் அவர்களிடன் சமர்பித்த பின்னர் சுல்தான் முன்னிலையில் அவர்கள் உறுதிமொழி எடுத்தும் கொண்டனர்.

சிலாங்கூர் மாநிலத்தின் 56 தொகுதிகளில் 51 தொகுதிகளில் பாக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று மீண்டும் மாநில ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.