SELANGOR

பிறந்த மண்ணை தற்காப்பேன் - டரோயா

2 மே 2018, 2:13 AM
பிறந்த மண்ணை தற்காப்பேன் - டரோயா

காப்பார்,மே02:

பிறந்த மண்ணான புக்கிட் காப்பாரை தற்காத்துக் கொள்வேன் என நடப்பு செமெந்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா ஹல்வி தெரிவித்தார்.

இதற்கு முன்னர் மேரு சட்டமன்றத்திலிருந்த புக்கிட் காப்பார் இம்முறை செமெந்தா சட்டமன்றத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் அங்கு தாம் வெற்றி பெறுவேன் என்றும் அவர் கூறினார்.

இந்த இடம் முன்பு வேறு தொகுதியில் இருந்தது.தற்போது செமெந்தா தொகுதியில் இப்பகுதி இணைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருப்பதோடு பிறந்த எ மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது நிறைவாய் இருபதாகவும் கூறினார்.

செமெந்தா சட்டமன்றத்தை தம்மால் தொடர்ந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனும் நம்பிக்கையை வெளிப்படுத்திய டரோயா மீண்டுக் சிலாங்கூர் மாநில ஆட்சியை தற்காப்பதோடு புத்ரா ஜெயாவையும் கைப்பற்றுவோம் என அவர் நம்பிக்கையோடு கூறினார்.

கடந்த 13வது பொதுத் தேர்தலில் 7846 வாக்குகள் வேறுப்பாட்டில் இத்தொகுதியில் வெற்றிப் பெற்ற டரோயா 76 விழுகாடு மலாய் வாக்காளர்களின் ஓட்டுகளை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புக்கிட் காப்பார் மக்கள் தேசிய முன்னணியை ஆதரிப்பர் என தேசிய முன்னணி கனவு காண்கிறது.ஆனால்,இங்குள்ள மக்கள் விவேகமானவர்கள்.அவர்கள் நிச்சயம் ஊழல் மிகுந்த தேசிய முன்னணியை தேர்வு செய்யமாட்டார்கள் என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.