SELANGOR

ஸ்ரீ அண்டலாஸ் மக்களை சுஹாய்மி ஒன்றிணைத்துள்ளார்!!

30 ஏப்ரல் 2018, 5:34 AM

கிள்ளான்,ஏப்30:

சுங்கை கண்டிஸ் வேட்பாளர் சுஹாய்மி ஷாஃபி சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நன் திட்டங்களை முன் வைத்து தனது பிரச்சாரத்தை தனது சுயவிவரங்கள் அடங்கிய அறிக்கைகளை விநியோகம் செய்தவாறு தொடங்கினார்.

முதற்கட்ட தேர்தல் பிரச்சாரமாக இங்குள்ள கிள்ளான் நகராண்மைக் கழகத்திற்கு உரிய அங்காடி கடைகளில் 150க்கும் மேற்பட்டவர்களை சந்தித்து பேசினார்.அவர்களின் ஆதரவு சுஹாய்மிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது என்றார்.

அவர்களோடு அமர்ந்து அவர்களின் அரசியல் பார்வை மற்றும் மனவோட்டங்களை கண்டறிந்த சுஹாய்மி ஹராப்பான் கூட்டணி மீதும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசின் மீது மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டிருப்பதை அறிய முடிந்ததாகவும் சுஹாய்மி கூறினார்.

தொடர்ந்து அவர் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஹராப்பான் கூட்டணியின் கொள்கை மற்றும் அதன் ஒருமித்த நோக்கம் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருப்பதாகவும் மக்களின் ஆதரவு பிரமிக்கும் வகையில் இருப்பதாகவும் சுஹாய்மி தனது முதற்கட்ட பிரச்சாரத்தின் போது கண்டறிந்ததாகவும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.