SELANGOR

கோம்பாக் எனது பெரிய குடும்பம் - அஸ்மின் அலி!!

30 ஏப்ரல் 2018, 5:19 AM
கோம்பாக் எனது பெரிய குடும்பம் - அஸ்மின் அலி!!

கோம்பாக்,ஏப்30:

தன்னோடு மிகவும் நெருக்கமான உறவையும் தனித்துவத்தையும் கொண்டிருக்கும் கோம்பாக் தொகுதி தனது பெரிய குடும்பம் போன்று என டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கோம்பாக் வட்டாரத்தை சார்ந்தவர்.அவரது வாழ்வியல் கிராமும் அதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்நிலையில்,இங்குள்ள மக்களோடும் இங்குள்ள வட்டாரங்களோடும் அணுக்கமான உறவையும் நட்பையும் கொண்டிருக்கும் தனக்கு கோம்பாக் ஒரு குடும்பம் போலவே உணர்த்துகிறது என்றார் அவர்.

இங்குள்ள மக்களோடு நெருங்கிய உறவு இருப்பதால் நாட்டின் 14வது பொதுத் தேர்தலில் தொடர்ந்து இத்தொகுதி நமது கோட்டையாக விளங்கும் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.

இத்தொகுதியில்,பாக்காத்தான் ஹராப்பான் தேசிய முன்னணி மற்றும் பாஸ் வேட்பாளருடன் தேர்தலை எதிர்கொள்ளும் வேளையில் சிலாங்கூர் வாழ் மக்கள் விவேகமானவர்கள் என்றும் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் ஹராப்பான் கூட்டணியை தேர்வு செய்வார் என்பதில் துளியும் ஐயமில்லை என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.