SELANGOR

அஸ்மின்: சிலாங்கூர் மாநிலத்தை தொடர்ந்து சிறந்த அடைவு நிலைக்கு கொண்டு செல்வேன்

20 ஏப்ரல் 2018, 6:48 AM
அஸ்மின்: சிலாங்கூர் மாநிலத்தை தொடர்ந்து  சிறந்த அடைவு நிலைக்கு கொண்டு செல்வேன்
அஸ்மின்: சிலாங்கூர் மாநிலத்தை தொடர்ந்து  சிறந்த அடைவு நிலைக்கு கொண்டு செல்வேன்

கோலா லங்காட், ஏப்ரல் 20:

எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சிலாங்கூர் மாநிலத்தை தற்க வைக்கும் சூழ்நிலையில் மாநில அரசாங்கத்தை நேர்மையான மற்றும் திறன்மிக்க செயல்பாடுகள் மூலம்  தொடர்ந்து செயல்படுத்தி வருவோம் என்று டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த நன்முயற்சிகள் வெற்றி பெற ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை அனைவரும் கட்டிக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"  கடின உழைப்பின் மூலம் சிலாங்கூர் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வளப்பம் பெறும். மாநில மக்கள் மிகப்பெரிய ஆதரவு பாக்காத்தானுக்கு வழங்கினால் நாங்கள் பொறுப்புடனும் மற்றும் நேர்மையான முறையிலும் அரசாங்கத்தை நிர்வாகம் செய்து மாநிலம் மலேசியாவிலேயே சிறந்த வளர்ச்சியை நோக்கி செல்ல வழி வகுப்போம்," என்று கோலா லங்காட் மாவட்ட மன்ற மண்டபத்தில் நடைபெற்ற நிலப்பட்டா மற்றும் பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள் (ஐபிஆர்) வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.