SELANGOR

பாக்காத்தான், மறுமலர்ச்சி கொள்கைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது

16 ஏப்ரல் 2018, 6:32 AM
பாக்காத்தான், மறுமலர்ச்சி கொள்கைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது

ஷா ஆலம் , ஏப்ரல் 16:

புத்ரா ஜெயா அரசாங்கத்தை நிர்வாகம் செய்ய வாய்ப்பு அளித்தால் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நாட்டின் மேம்பாட்டில் மறுமலர்ச்சி கொள்கைகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறது என்று பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். மலேசிய அரசு நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்வதில் மிக உறுதியாக இருக்கிறோம் என்று ஆணித்தரமாக கூறினார்.

மேலும் கூறுகையில், நாட்டின் கல்வி கொள்கைகளை மறுசீரமைப்பு செய்து திறன்மிக்க பட்டதாரிகளை உருவாக்கி மலேசிய பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அஸ்மின் அலி கூறினார்.

"  எதிர் வரும் 14-வது பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் மகத்தான வெற்றியை பரிசளித்தால் நானும் மற்ற தலைவர்களும் தலைசிறந்த  கல்வி திட்டத்தை நிறைவேற்ற எண்ணம் கொண்டிருக்கிறோம். கல்வி திட்டத்தில் மறுசீரமைப்பு செய்து எல்லா மக்களும் பயனடையும் வகையில் இருக்க வேண்டும்," என்று ஜூப்லி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கான உதவி நிதிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.