SELANGOR

கெஅடிலான் கட்சியில் கைரூடின் இணைவதாக அஸ்மின் அறிவித்தார்

8 ஏப்ரல் 2018, 5:00 PM
கெஅடிலான் கட்சியில் கைரூடின் இணைவதாக அஸ்மின் அறிவித்தார்

சுங்கை பூலோ, ஏப்ரல் 9:

பாயா ஜெராஸ் சட்ட மன்ற உறுப்பினர் முகமட் கைரூடின் ஓத்மான் கெஅடிலான் கட்சியில் இணைந்து விட்டதாக கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

"  நான் இன்று மகிழ்ச்சியுடன், நண்பர் மாண்புமிகு முகமட் கைரூடின் ஓத்மான் நமது போராட்டத்தில் இணைவதாக அறிவிக்கிறேன்," என்று பாயா ஜெராஸ் தெங்கா இரவுச் சந்தையில் நடைபெற்ற மாபெரும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில்  பேசும்போது அவர் தெரிவித்தார்.

2000-த்துக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மறுமலர்ச்சியின் சுலோகம் ஒலித்துக் கொண்டே இருந்தது. கைரூடின் பிரச்சார மேடை மீது ஏறி அஸ்மின் அலியை கட்டி அணைத்துக் கொண்ட பிறகு கெஅடிலான் அங்கத்தினர் பாரத்தை ஒப்படைத்தார்.

கொண்டாட்டம் அதோடு நின்றுவிடாமல், அஸ்மின் அலியை வாகனம் ஏறும் வரை கூடவே வந்த  போது பொது மக்கள் ஆரவாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டது என்று இது காட்டுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.