SELANGOR

சிலாங்கூர் மாநில நிர்வாகத்திறன் தனி சிறப்பு கொண்டது

29 டிசம்பர் 2017, 1:24 PM
சிலாங்கூர் மாநில நிர்வாகத்திறன் தனி சிறப்பு கொண்டது

ஷா ஆலம், டிசம்பர் 30:

டத்தோ நோர்டின் சுலைமான் அவர்கள் தன் பதவி ஒய்வு நிகழ்வின் போது மாநில தலைவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்கள் அரசு ஊழியர்கள் நன்றே பணி செய்யவும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார்.

மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியின் தலைமையில் சிலாங்கூர் மாநில அரசு தலைமைத்துவம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறப்பு பெற்றதாகப் பதிவு செய்தார் டத்தோ நோர்டின் சுலைமான் அவர்கள்.

அவர் அம்மாநில தலைவர்கள் மேன்மேலும் பல உதவிகள் செய்யும் நிகழ்வுகளை மக்களுக்கென ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். அரசு கட்சிகளிண் வெவ்வேறான தலைமைத்துவமும் அதன் முன்னேற்றமும் தான் பணிக் காலத்தில் உணர்ந்ததாக தனது பேட்டியில் பதிவு செய்தார். 2008 – ஆம் ஆண்டு அரசு மாறிய போது அதன் திட்டங்களும் மேம்பாடுகளும் மாறுபட்டு இன்று அதன் வழி மாநில நிதி உயர்வு கண்டது சிறப்பான தலைமைத்துவத்தில் ஒன்றாக அமையும் என்றார்.

2014-ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியின் தலைமையில் புதிய திட்டங்களும் நிகழ்வுகளும் சிறந்த தலைமைத்துவம் என்றார் டத்தோ நோர்டின் சுலைமான் அவர்கள்.

#வீரத் தமிழன்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.