SELANGOR

மாநில நிதித் துறை அதிகாரி 36 வருடங்கள் பணிக்குப் பின் பதவி ஓய்வு பெற்றார்

29 டிசம்பர் 2017, 1:05 PM
மாநில நிதித் துறை அதிகாரி 36 வருடங்கள் பணிக்குப் பின் பதவி ஓய்வு பெற்றார்

ஷா ஆலம், டிசம்பர் 30:

மாநில நிதி துறை அதிகாரி, டத்தோ நோர்டின் சுலைமான் 36 வருடங்கள் 30 நாட்கள் முடிந்து இன்று அரசு ஊழியராகப் பதவி ஓய்வு பெற்றார்.

ஐந்து ஆண்டு காலமாக இவர் இருந்த பொறுப்பில் ஜனவரி 2018 தொடங்கி அரசு மேம்பாட்டு துணைச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோன் பதவி ஏற்பார். மாநில பொருளாதார திட்டத்தில் ஒரு பகுதியை வகுத்த இவர் தன் அனுபவத்தில் நிறைய பாடங்களையும் அனுபவங்களையும் தான் பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் தன் பணி காலங்களில் தான் பல சுக துக்க அனுபவங்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

சிலாங்கூர் இன்றுக்கு பேட்டியளித்த போது  தான் பணியாற்றிய காலங்களில் தன்னால் இயன்றதை வழியதாகவும், மேலும் அடுத்த சந்ததிக்கு வழி கொடுத்து தான் பணி ஒய்வு பெரற்றதாகவும் கூறினார். நோர்டின் அவர்கள் கிள்ளான் மாவட்ட அதிகாரியாக, மாவட்ட துணை அதிகாரியாக, மற்றும் ஷா ஆலம் நகர செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 1 நவம்பர் 2012 தான் மாநில நிதி துறை அதிகாரியாகப் பதவி ஏற்று இன்று தன் கடமையைச் செவ்வனே ஆற்றி முடித்தார். பதவி மாற்றும் நிகழ்வு மாநில அரசு செயலாளர் டத்தோ முகமட் அமின் அமட் யஹ்யா சாட்சியாக நிகழ்ந்தது.

#தமிழ் அரசன்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.