SELANGOR

'கீஸ்' அட்டை விண்ணப்பங்கள் சூடுபிடித்துள்ளது

22 டிசம்பர் 2017, 8:22 AM
'கீஸ்' அட்டை விண்ணப்பங்கள் சூடுபிடித்துள்ளது

ரவாங், டிசம்பர் 22:

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தாய்மார்களுக்கு என்று பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட திட்டமே அன்புத் தாய் விவேக சிலாங்கூர் (கீஸ்) அட்டை ஆகும். இத்திட்டத்தின் விண்ணப்பங்கள் சிலாங்கூர் தாய்மார்களிடையே சிறந்த ஒரு வரவேற்பை பெற்றுள்ளது என்று ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நீ தெரிவித்தார். இதுவரை தனது அலுவலகத்தில் மட்டும் 700 விண்ணப்பங்கள் வந்து குவிந்து கிடக்கின்றன என்று கூறினார்.

"  இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 விண்ணப்பங்கள் வந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் ரவாங் சட்ட மன்ற அலுவலகத்தில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு பதிவு செய்து வருகிறார்கள்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

ஒவ்வொரு கீஸ் அட்டை விண்ணப்பத்திற்கும் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி அலசி ஆராய்ந்த பின்னரே எடுத்துக் கொள்ளப் படுகின்றன என்று கான் பெய் நீ விவரித்தார். ரவாங் சட்ட மன்றத்தின் கீழ் ஐந்து பலசரக்கு கடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கீஸ் அட்டை பயனீட்டாளர்கள் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

#தமிழ் அரசன்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.