SELANGOR

அஸ்மின்: புத்ராஜெயாவை, 14-வது பொதுத் தேர்தலில் கைப்பற்ற ஆயுத்தமாகுங்கள்

10 டிசம்பர் 2017, 5:45 AM
அஸ்மின்: புத்ராஜெயாவை, 14-வது பொதுத் தேர்தலில் கைப்பற்ற ஆயுத்தமாகுங்கள்

ஷா ஆலம், டிசம்பர் 10:

கெஅடிலான் கூடிய விரைவில் நடைபெற உள்ள 14-வது பொது தேர்தலை எதிர் கொள்ள தயாராக உள்ளது என கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். கட்சியின் தேர்தல் இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டு இருப்பதாகவும், அஃது அம்னோ தேசிய முன்னணியிடம் இருந்து புத்ரா ஜெயாவை கைப்பற்றி சாதனை படைக்கும் என்று சூளுரைத்தார்.

"  நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் இப்போது நாடாளுமன்றத்தை களைத்து ஜனவரியில் தேர்தலை நடத்தினால், கட்சியின் தேர்தல் இயந்திரங்கள் எதிர் கொள்ள தயாராக உள்ளது என நம்புகிறேன்," என்று ஷா ஆலம் செக்சன் 7, பிகேஎன்எஸ் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற கோத்தா அங்கிரிக் சட்ட மன்ற தொகுதியின் 'மக்களின் மீது அக்கறை' சூறாவளி பயண நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

#தமிழ் அரசன்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.