SELANGOR

தாமான் ரஸ்னா வெள்ளத்தினால் பாதிக்கப்ட்டோருக்கு சிலாங்கூர் மாநில இந்திய கிராமத்து தலைவர்களின் பொருள் உதவி

13 நவம்பர் 2017, 3:47 PM
தாமான் ரஸ்னா வெள்ளத்தினால் பாதிக்கப்ட்டோருக்கு சிலாங்கூர் மாநில இந்திய கிராமத்து தலைவர்களின் பொருள் உதவி
தாமான் ரஸ்னா வெள்ளத்தினால் பாதிக்கப்ட்டோருக்கு சிலாங்கூர் மாநில இந்திய கிராமத்து தலைவர்களின் பொருள் உதவி

தாமான் ரஸ்னா, நவம்பர் 13:

சிலாங்கூர் மாநில இந்திய கிராமத்து தலைவர்கள் ஏற்பாட்டில் தாமான் ரஸ்னா கிள்ளான் வீடமைப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு சிலாங்கூர் மாநில இந்திய கிராமத்து  தலைவர்களின் ஒருங்கிணைப்பாளரான திரு ராஜேந்திரன் தலைமையில் பொருள் உதவி வழங்கப்பட்டது.

கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு சிலாங்கூர் மாநில இந்திய கிராமத்து  தலைவர்கள் முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த உதவியினை நல்கிய அனைத்து தலைவர்கள் மற்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் திரு ராஜேந்திரன் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியினை ரிம்பா ஜெயா இந்திய கிராமத்து தலைவர் திரு ஆர் தி சரவணன் தெரிவித்துக்கொண்டார்.

செய்தி தொகுப்பு : தீபன்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.