SELANGOR

தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டும் உதவாமல், மக்களுக்கு எப்போதும் சேவை செய்யுங்கள்

13 செப்டெம்பர் 2017, 8:56 AM
தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டும் உதவாமல், மக்களுக்கு எப்போதும் சேவை செய்யுங்கள்

ஷா ஆலம், செப்டம்பர் 13:

தாமான் மேடான் டேசா பெரங்சாங் அடுக்ககத்திற்கு மத்திய அரசாங்கம் ரிம 7 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்த நடவடிக்கையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வரவேற்கிறது என்று மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர் வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் கூறினார். ஆனாலும் மத்திய அரசாங்கம் தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டும் உதவக்கூடாது. மாறாக எல்லா காலங்களிலும் பொது மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்றார்.

மேலும் கூறுகையில், மத்திய அரசாங்கம் சிலாங்கூர் மாநில அரசாங்கம் எல்லா காலங்களிலும் உதவும் செயல்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாநில அரசாங்கம் 2011-இல் இருந்து சமூக நல மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பிற்கு நிதி உதவி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றார். டேசா பெரங்சாங் அடுக்ககத்திற்கு மொத்தம் ரிம 438,905 இதுவரை வழங்கியுள்ளது என்று விவரித்தார்.

#கேஜிஎஸ்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.