SELANGOR

பண்டார் பாரு கோலா சிலாங்கூரில் வீடு தீக்கிரையானது

5 செப்டெம்பர் 2017, 2:03 PM
பண்டார் பாரு கோலா சிலாங்கூரில் வீடு தீக்கிரையானது

கோலா சிலாங்கூர், செப்டம்பர் 5:

இன்று அதிகாலை நடந்த தீ விபத்தில் பண்டார் பாரு கோலா சிலாங்கூரில் அமைந்துள்ள திருமதி சு. தங்கமணியின் (வயது 45) வீடு தீப்பற்றி எரிந்தது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியது. ஆனாலும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கோலா சிலாங்கூர் மாவட்ட சமூக நலத் துறை அதிகாரி அஸிலா கூறினார்.

சமூக நல இலாகா அவசர உதவியாக நிவாரண பொருட்களை வழங்கியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பண உதவிகள் வழங்கப்படாது என்றும் காவல்துறையின் புகார் பிரதியை பெற்ற பிறகு நிதி உதவி வழங்கப்படும் என்று கூறினார். தீ பற்றியதிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை, தீயணைப்பு படையினரின் அறிக்கையை கொண்டே காரணங்களை ஆராய முடியும் என்றார். திருமதி சு. தங்கமணி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் உறவினர்கள் வீட்டில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்து உள்ளனர்.

#கு.குணசேகரன் குப்பன்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.