SELANGOR

பேருந்து கட்டண உதவிநிதி 2017

27 ஆகஸ்ட் 2017, 5:19 PM
பேருந்து கட்டண உதவிநிதி 2017

கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 27:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தோட்டத் தொழிலாளர் நிரந்தர குழுவின் கீழ் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான பேருந்து கட்டண உதவி நிதி வழங்கும் விழா கம்போங் ராஜா மூசா பொது மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளான கம்போங் பாரூ தோட்டத் தமிழ்ப்பள்ளி, ராஜா மூசா தமிழ்ப்பள்ளி, சுங்கை தெராப் தமிழ்ப்பள்ளி மற்றும் ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றை சேர்ந்த 150 மாணவர்கள் பேருந்து கட்டண உதவி நிதியை பெற்றுக் கொண்டனர். ஒவ்வொரு மாணவர்களும் தலா ரிம 300 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் பிரதிநிதியாக திரு தர்மேந்திரா, பெர்மாத்தாங் சட்ட மன்ற ஒருங்கிணைப்பாளர் திருமதிப்பிலான ரோஸானா மற்றும் சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

#கேஜிஎஸ்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.