SELANGOR

மந்திரி பெசாரின் மாமியார் இன்று மாலை 4.25-க்கு காலமானார்

25 ஜூலை 2017, 9:33 AM
மந்திரி பெசாரின் மாமியார் இன்று மாலை 4.25-க்கு காலமானார்

ஷா ஆலம், ஜூலை 25:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் மாமியார், சித்தி ரஹ்மா இஸ்மாயில் அம்பாங் கிலீன்ஏகல்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை 4.25 மணிக்கு இறந்து விட்டதாக மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் மாண்புமிகு சுஹாய்மி ஷாஃபி தெரிவித்தார்.

தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், சுஹாய்மி டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் குடும்பம் அன்னாரின் உடலை அம்பாங், தாமான் தார், டாருல் ஏசான் பள்ளிவாசலில் இரவு இஷாக் தொழுகைக்கு பிறகு அடக்கம் செய்யப்பட இருக்கிறது என்று தெரிவித்ததாக கூறினார். அன்னாரின் உடல் அருகாமையில் உள்ள கிள்ளான் கேட் இஸ்லாமிய சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும் என்று சுஹாய்மி தெரிவித்தார். மேலும் மந்திரி பெசாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் செய்தியை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.