SELANGOR

உலு லங்காட்-இல் தற்காலிக குடிநீர் தடங்கல்

1 ஜூன் 2017, 3:11 AM
உலு லங்காட்-இல் தற்காலிக குடிநீர் தடங்கல்

ஷா ஆலம், ஜூன் 1:

குடிநீர் குழாய்கள் உடைந்ததால் உலு லங்காட் பகுதியில் குடிநீர் தடங்கல் ஏற்படும் என்று ஷாபாஸ் எனப்படும் சிலாங்கூர் குடிநீர் விநியோகம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. சுங்கை செராய் 11 மைல், லோராங் செராய் வளைவில் இந்த குழாய் உடைப்பு நடந்ததாக தெரிவித்துள்ளது.

"   இந்த குடிநீர் விநியோகத்  தடங்கல் குழாய்களை மாற்றும் நடவடிக்கையினால் ஏற்படுகிறது. குடிநீர் விநியோகம் இந்த மறுசீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் எப்போதும் போல குடிநீர் விநியோகம் செய்யப்படும்," என்று அறிக்கையில்   கூறியுள்ளது.

இதை மேற்கோள்காட்டி, ஷாபாஸ் பொது மக்களிடம் இருந்து ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறது என்றும் மேலும் தகவல்கள் பெற மைஷாபாஸ் அல்லது டிவிட்டர் மற்றும் சிலாங்கூர் குடிநீர் அகநூல் வழியாகவும் தெரிந்து கொள்ளலாம் என்ற கூறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.