SELANGOR

பெடுலி சேஹாட் திட்டத்தில் இன்னும் அதிகமான மக்களை பதிவு செய்ய உத்தேசம்

29 மே 2017, 6:13 AM
பெடுலி சேஹாட் திட்டத்தில் இன்னும் அதிகமான மக்களை பதிவு செய்ய உத்தேசம்

கிள்ளான், மே 29:

சுங்கை பினாங் சட்ட மன்றம் 2017-குள் 500 குடும்பங்களை பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்டத்தில் பதிவு செய்ய உத்தேசித்து உள்ளது என்று சுங்கை பினாங் சட்ட மன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ தேங் சாங் கிம் நினைவுறித்தனார். இதுவரை 150 குடும்பங்களை பதிவு செய்து விட்டதாக தெரிவித்தார்.

"   மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கிறது மற்றும் இன்று வரை 150 பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டது. இன்னும் பொது மக்களுக்கு விவரங்கள் போய் சேரவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 500 குடும்பங்களை பதிவு செய்து விடுவோம்," என்று கூறினார்.

பெடுலி சேஹாட் திட்டத்தை கடந்த ஜனவரி 24-இல் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ரிம 125 ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார். மாநில அரசாங்கம் ஒரு மில்லியன் சிலாங்கூர் மக்களை பதிவு செய்ய உத்தேசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.