SELANGOR

பாஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டு மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையை நிலைநிறுத்த பாடுபடுவார்கள்

8 மே 2017, 10:04 AM
பாஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டு மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையை நிலைநிறுத்த பாடுபடுவார்கள்
பாஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டு மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையை நிலைநிறுத்த பாடுபடுவார்கள்

ஷா ஆலம், மே 8:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மை நிலைநிறுத்த பாஸ் கட்சியின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தொடர்ந்து மக்களின் 13வது பொதுத் தேர்தலில் கொடுத்த ஆணையை மதித்து மாநிலத்தின் தலைமைத்துவத்திற்கு ஆதரவு  அளிப்பது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநில மூத்த ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் தெரிவிக்கையில், மக்களுக்கு சேவை செய்யும் முயற்சிகள் குறிப்பாக மக்கள் நலன் திட்டம்  (ஐபிஆர்) தொடர்ந்து செயல்படுத்தி சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிலைத்தன்மையை காக்கும் கேடயமாக விளக்குவோம் என்று தெரிவித்தார்.

" பலவிதமான வீண் வதந்திகள் மாநில அரசாங்கத்தில் பாஸ் கட்சியின் பங்களிப்பு பற்றி பேசப்பட்டாலும், நிர்வாகத்தின் நிலைத்தன்மைக்கு பாஸ் கட்சி தொடர்ந்து மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமைத்துவத்தை ஆதரிக்கும். இதை அடிப்படையாகக் கொண்டு, பாஸ் கட்சியின் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தங்களின் பணிகளில் ஈடுபட்டு மாநில அரசாங்கத்தின் திட்டங்களில் கவனம் செலுத்த முற்பட வேண்டும்," என்று கூறினார்

iskandar01

 

 

 

 

 

" ஆக, நாங்கள்  இருந்து வரும்  அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு, புரிந்துணர்வு மற்றும் தலைமைத்துவத்தை ஆதரிக்கும் வகையில்  இருப்பதாகவும், இதனால் மக்களின் நலன்களை பாதுகாக்கும் பொறுப்புள்ளவர்களாக தொடர்ந்து சேவை ஆற்றுவோம்," என்று மேலும் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.