SELANGOR

செமந்தா காஜாங் எம்.ஆர்.டி சேவை ஜூலையில் தொடங்கும்

9 ஏப்ரல் 2017, 1:13 PM
செமந்தா காஜாங் எம்.ஆர்.டி சேவை ஜூலையில் தொடங்கும்

 

 

 

 

பெட்டாலிங் ஜெயா- 30 கி.மீட்டர் தூரத்தை கொண்ட செமந்தா தொடங்கி காஜாங் வரையிலான 2வது எம்.ஆர்.டி இரயில் சேவை இவ்வருடம் ஜூலை மாதத்தில் அதன் சேவையினை தொடங்கும்.இந்த பயணம் 19 நியங்களை கொண்டிருக்கும் எனவும் இர்லராஃப்பிட் இரயில் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி  டத்தோ ஐஆர் ஜோகாரி சுலைமான் தெரிவித்தார்.

சுங்கை பூலோ தொடங்கி செமந்தா வரையிலான எம்.ஆர்.டி சேவை கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் அதன் சேவையினை தொடங்கிய வேளையில் அதன் தொடர்ச்சியாக இந்த 2ஆம் கட்ட சேவை  இவ்வருட ஜூலை மாதம் தொடங்கும் என்றார்.

எம்.ஆர்.டி சேவை மக்களின் முதன்மை தேர்வாக அமைய வேண்டும் என்பதற்காக அந்நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறிய அவர் அதில் கேளிக்கை நிகழ்வுகளும் உள்ளடங்கி உள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

இந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஒவ்வொரு வார இருதியிலும் இந்த கேளிக்கை நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் மேலும் கூறிய அவர் இதில் பொழுத்துப் போக்கு நிகழ்வுகளோடு உணவு விற்பனையும் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.இதில் சுமார் 60 வியபாரிகள் பங்கெடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எம்.ஆர்.டி. சேவை இன்றைய சூழலில் மக்களின் இன்றியமையாத தேவையாக இருப்பதாகவும் கூறிய அவர் மக்களின் தேவைக்கு ஏற்பவும் வசதிக்கு ஏற்பவும் பல்வேறு மேம்பாட்டையும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் தங்களின் நிறுவனம் துள்ளியமாய் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.