சிலாங்கூரில் 71,152 SPM தேர்வெழுதும் மாணவர்களுக்கு 5 நாட்களுக்கு இலவச உணவு

23 நவம்பர் 2026, 4:41 AM
சிலாங்கூரில் 71,152 SPM  தேர்வெழுதும் மாணவர்களுக்கு 5 நாட்களுக்கு இலவச உணவு
சிலாங்கூரில் 71,152 SPM  தேர்வெழுதும் மாணவர்களுக்கு 5 நாட்களுக்கு இலவச உணவு
சிலாங்கூரில் 71,152 SPM  தேர்வெழுதும் மாணவர்களுக்கு 5 நாட்களுக்கு இலவச உணவு

ஷா ஆலாம், நவ 23 : சிலாங்கூர் ஊட்டச்சத்து திட்டத்தின் (NutriSEL) கீழ், மாநிலம் முழுவதும் உள்ள 256 பள்ளிகளைச் சேர்ந்த 71,152 எஸ்.பி.எம் (SPM) தேர்வெழுதும் மாணவர்களுக்கு, முதன்மைப் பாடங்களுக்கான (mata pelajaran teras) ஐந்து தேர்வு நாட்களில் ஒருவருக்கு தலா 8 ரிங்கிட் மதிப்புள்ள சத்தான மதிய உணவு வழங்கப்படுகிறது.

தேர்வு காலத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்யும் வகையில், மாநில அரசாங்கம் மற்றும் MBI- சிலாங்கூர் மெந்திரி பெசார் கழகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 30 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதீன் ஷாரி தெரிவித்தார்.

ஆலாம் இம்பியான் சிலாங்கூர் ஒருங்கிணைந்த தஹ்ஃபிஸ் பள்ளி மாணவர்களுக்கு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி பொருள் கூடையை வழங்குகிறார். — படம்: ரெமி அரிஃபின் / மீடியா சிலாங்கூர்.

"விருப்பப் பாடங்கள் (mata pelajaran pilihan) மாணவர்களுக்கு ஏற்ப மாறுபடும் என்பதால், முதன்மைப் பாடங்களுக்கான ஐந்து நாட்களுக்கு மட்டும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்." என்று இன்று இங்குள்ள ஆலாம் இம்பியான் சிலாங்கூர் ஒருங்கிணைந்த தஹ்ஃபிஸ் பள்ளியில் நடைபெற்ற 'NUTRISEL SPM' திட்ட ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மேலும், முழு உறைவிடப் பள்ளிகள், சமயப் பள்ளிகள் மற்றும் சிறப்புக் கல்வி நிறுவனங்கள் உட்பட 20 பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2,442 எஸ்.பி.எம் தேர்வெழுதும் மாணவர்களுக்கு 'NUTRISEL கூடை' (Bakul NUTRISEL) வழங்கப்படுகிறது.

வைட்டமின் சி, ரொட்டி, தானியங்கள், பால், சாக்லேட் மற்றும் மாணவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இக்கூடை வழங்கப்படுவதன் மூலம், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை 73,594 பேராக உயர்ந்துள்ளது.

நவம்பர் 23 முதல் 30 வரை செயல்படுத்தப்படும் இத்திட்டம், தேர்வுக் காலத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், கவனத்தை அதிகரிப்பதையும், அவர்களின் நலனைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.