எதிராளிக்கு உடல்நலக் குறைவு: சீன பொது விருது ஸ்குவாஷ் வெற்றியாளரானார் சிவசங்கரி

22 நவம்பர் 2026, 3:12 PM
எதிராளிக்கு உடல்நலக் குறைவு: சீன பொது விருது ஸ்குவாஷ் வெற்றியாளரானார் சிவசங்கரி

ஷா ஆலாம், நவ 22 : சீனா பொது விருது ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில் விளையாடவிருந்த, ஜப்பானின் சடோமி வதானபே உடல்நலக் குறைவு காரணமாக போட்டியிலிருந்து விலகியதையடுத்து, தேசிய ஸ்குவாஷ் நட்சத்திரம் எஸ். சிவசங்கரி இன்று இரவு வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார்.

ஷாங்காய் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கெடாவைச் சேர்ந்த சிவசங்கரி (வயது 27) முதல் நிலை வீராங்கனையாகவும், ஜப்பானின் சடோமி இரண்டாம் நிலை வீராங்கனையாகவும் களமிறங்கியிருந்தனர்.

தற்போது உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சிவசங்கரிக்கு இப்பருவம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

கடந்த அக்டோபரில் சிலிக்கான் வேலி பொது விருது,கடந்த ஏப்ரலில் சூரிச்சில் நடைபெற்ற கிராஸ்ஹாப்பர் கிண்ணம், கடந்த மார்ச்சில் ஆஸ்திரேலிய பொது விருது ஆகியவற்றை வென்று அவர் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

கடந்த செப்டம்பரில் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றியாளர் பட்டத்தையும் அவர் தக்கவைத்துக் கொண்டார்.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.