பேரிடர் எச்சரிக்கை முறையை ஆதரிக்காத தொலைபேசிகளுக்கு SMS எச்சரிக்கை தொடரும் - ஃபாஹ்மி

22 நவம்பர் 2026, 9:44 AM
பேரிடர் எச்சரிக்கை முறையை ஆதரிக்காத தொலைபேசிகளுக்கு SMS எச்சரிக்கை தொடரும் - ஃபாஹ்மி

கோலாலம்பூர், நவ 22 — பேரிடர் முன்னெச்சரிக்கை முறைக்கான(EWS) குறைந்தபட்சத் தொழில்நுட்பத் தகுதிகளைப் பூர்த்தி செய்யாத திறன்பேசி (smartphone) பயனர்கள் அவசரகால எச்சரிக்கைகளில் இருந்து விடுபட மாட்டார்கள் என்றும், அவர்களுக்குக் குறுஞ்செய்தி (SMS) மூலமான அறிவிப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பால் (Nadma) இயக்கப்படும் தற்போதைய அறிவிப்பு முறை வழக்கம் போல் தொடரும் என்று அவர் கூறினார்.

"எனவே, எஸ்.எம்.எஸ் அறிவிப்பு முறை இன்னும் செயல்பாட்டில் உள்ளது; நட்மா (Nadma) நிச்சயமாக அதைச் செயல்படுத்த முடியும். அது இப்போதும் பயன்பாட்டில் உள்ளது," என்று ' 2026 மைரீடர்ஸ் லெம்பா பந்தாய் ' (MYReaders Lembah Pantai 2026) திட்டத்தின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

மலேசியத் தொடர்பு , பல்லூடக ஆணையத்தால் (MCMC) உருவாக்கப்பட்ட இந்த முன்னெச்சரிக்கை முறை (EWS), ஏற்கனவே உள்ள நடைமுறைகளுக்குப் பதிலாக மாற்றப்படாமல், பொதுமக்களுக்குப் பேரிடர் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதை மேலும் வலுப்படுத்தும் ஒரு துணை அமைப்பாகச் செயல்படும் என்று அவர் கூறினார்.

வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில், குறிப்பாக ஆற்றங்கரையோரங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீர்ப்பாசன - வடிகால் துறை (DID) எச்சரிக்கை ஒலிப்பான்களை (sirens) நிறுவியுள்ளதாகவும் ஃபாஹ்மி குறிப்பிட்டார்.

முன்னதாக நவம்பர் 19-ஆம் தேதி, EWS எச்சரிக்கைகளைப் பெறுவதற்கு ஏதுவாகப் பயனர்கள் தங்கள் திறன்பேசிகளைப் புதுப்பிக்குமாறு எம்.சி.எம்.சி (MCMC) வலியுறுத்தியிருந்தது.

இதற்கான குறைந்தபட்சத் தகுதிகளாக ஐபோன் 11 (iPhone 11) அல்லது அதற்குப் பிந்தைய மாடல்களில் iOS 27.2 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பும், ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் Android 12 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பும், ஹுவாவெய் (Huawei) சாதனங்களில் EMUI 16 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.