சிலாங்கூரில் பல்வேறு திட்டங்கள் மூலம் 76,865 பேருக்கு வேலைவாய்ப்பு

20 நவம்பர் 2026, 5:55 AM
சிலாங்கூரில் பல்வேறு திட்டங்கள் மூலம் 76,865 பேருக்கு வேலைவாய்ப்பு
சிலாங்கூரில் பல்வேறு திட்டங்கள் மூலம் 76,865 பேருக்கு வேலைவாய்ப்பு

ஷா ஆலாம், நவ.20 – சிலாங்கூரில் 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2026-ஆம் ஆண்டு அக்டோபர் வரை பல்வேறு வேலைவாய்ப்புத் திட்டங்கள் வாயிலாக மொத்தம் 76,865 பேருக்கு வேலைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்தது.

இதில், 2025-ஆம் ஆண்டு முழுவதும் 38,731 பேரும், 2026-ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 38,134 பேரும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

குறிப்பாக, சமூகத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் வேலைவாய்ப்புப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குவதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக மனிதவளத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

ஜோப்கேர் சிலாங்கூர் வேலைவாய்ப்புக் கண்காட்சி, சிறப்புத் தேவையுடையோருக்கான வேலைவாய்ப்புக் கண்காட்சி, சிலாங்கூர் மெகா ஜோப்கேர் 2026 மற்றும் SCOUT Talent Expo 2026 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வேலை தேடுபவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் ரெஸ்யூம் தயாரிப்பு ஆலோசனை, தொழில் வழிகாட்டுதல் மற்றும் நேர்முகத் தேர்வுக்கான தயார் நிலை ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற வாய்மொழிக் கேள்வி நேரத்தின்போது, பாப்பாராய்டு சார்பில் சமயத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் முகமட் ஃபஹ்மி ஙா இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், வேலைவாய்ப்புக் கண்காட்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்காக மாநில அரசு RM1 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் வேலை இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் RM1.5 மில்லியன் நிதியுடன் மற்றொரு வேலைவாய்ப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது.

பெர்கேசோ (PERKESO) மற்றும் சில்லறை விற்பனை, உற்பத்தி, சரக்குப் போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் 30,000 வேலை தேடுபவர்களை ஈடுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.