ஆண்டு இலக்கைத் தாண்டி சிலாங்கூர் வருவாய் 3 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது

17 நவம்பர் 2026, 1:21 PM
ஆண்டு இலக்கைத் தாண்டி சிலாங்கூர் வருவாய் 3 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது
ஆண்டு இலக்கைத் தாண்டி சிலாங்கூர் வருவாய் 3 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது
ஆண்டு இலக்கைத் தாண்டி சிலாங்கூர் வருவாய் 3 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது

ஷா ஆலாம், நவ 17 : நேற்று வரையில், சிலாங்கூரின் வருவாய் வசூல் 300 கோடி ரிங்கிட்டை எட்டியது. இவ்வாண்டு முழுவதுக்குமான 280 கோடி ரிங்கிட் வருவாய் வசூலுக்கான இலக்கை அது தாண்டியிருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

அந்த வருவாய் வசூலிப்புத் தொகை, நாட்டின் நிதி நிலை தொடர்ந்து வலுவாக இருப்பதைக் காட்டியுள்ளது. அத்துடன் மேம்பாட்டுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தக் கூடிய ஆற்றலையும் அந்த நிதி நிலை காட்டியிருப்பதாக அமிரூடின் கூறினார்.

இதனிடையே, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக உட்கட்டமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் சுமுகமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், மாநில மேம்பாட்டு நடவடிக்கைக் குழுவின் (MTPNg) கண்காணிப்பின் கீழ் மத்திய அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை மாநில அரசு தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

“பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள அனைத்து உயர்மதிப்பு தேசியத் திட்டங்களையும் MTPNg கண்காணிப்பதால், சமூகப் பிரச்சினைகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைப்போம்,” என்று அவர் கூறினார்.

ஷா ஆலாம் ,சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மையத்தில் (SITC) சிலாங்கூர் மந்திரி பெசார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நடைபெற்ற ஊடகப் பாராட்டு விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, மக்கள் தரமான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதை உறுதி செய்யும் வகையில், வறுமை விகிதத்தைக் குறைக்கும் முயற்சிகளிலும் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக அமிருடின் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.