ஷா ஆலாம், நவ.15 – சாலைப் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, பண்டார் புக்கிட் பூச்சோங்கில் உள்ள ஜாலான் பத்து 12-இன் ஒரு பகுதி நாளை நவம்பர் 16-ஆம் தேதி இரவு 10 மணி முதல் போக்குவரத்துக்கு மூடப்படும்.
பெட்டாலிங் மாவட்ட பொதுப்பணித் துறை (JKR) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பழைய சாலை மேற்பரப்பை அகற்றி புதிய தார் சாலை அமைக்கும் (Mill and Pave) பணிகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
பணிகள் சீராக நடைபெறவும் சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவும் தினமும் மாலை 5 மணி வரை அச்சாலை மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இப்பணிகளில் புதிய சாலை மேற்பரப்பு அமைத்தல், சாலைப் பாதைக் கோடுகளைப் புதிதாக வரைதல் மற்றும் போக்குவரத்து விளக்குகள் உள்ள சந்திப்புகளில் மஞ்சள் பெட்டிக் கோடுகளை வரைவது ஆகியவை இடம்பெறும்.
இதனால், வாகனமோட்டிகள் வேகத்தைக் குறைத்து, அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து அறிவிப்புப் பலகைகள் மற்றும் பணியாளர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதுடன், தங்களது பயணங்களையும் முன்கூட்டியே திட்டமிடுமாறு பொதுப்பணித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.







