மலாக்கா, நவ.15: மலாக்காவின் 16-ஆவது மாநிலத் தேர்தலில் போட்டியிட்ட 28 சட்டமன்றத் தொகுதிகளில் 21 இடங்களைக் கைப்பற்றி தேசிய முன்னணி (BN) வெற்றி பெற்றது.
இதன் மூலம் தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி இணைந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.
தேர்தல் ஆணையம் (SPR) வெளியிட்ட இறுதி அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, தேசிய முன்னணி 21 தொகுதிகளிலும், பக்காத்தான் ஹராப்பான் (PH) 4 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேஷனல் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருன் இன்று நள்ளிரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் ஆட்சியமைக்க 15 இடங்கள் தேவைப்படும் நிலையில், தேசிய முன்னணி தனிப்பெரும்பான்மையைத் தாண்டி 21 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதற்கிடையில், தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி இணைந்து மொத்தம் 24 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. இதன் மூலம் மாநிலச் சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்குத் தேவையான 19 இடங்களையும் தாண்டியுள்ளன.
மேலும், இம்மாநிலத் தேர்தலில் மொத்தம் 493,573 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 71.77 விழுக்காடாகும்.
மலாக்காவின் 16ஆவது மாநிலத் தேர்தல் தொடர்பான முழுமையான முடிவுகளை https://election.bernama.com/prn/melaka/2026/ என்ற இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம்.








