கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 : மாநில மக்களின் நலனுக்காகவும் சுபீட்சத்திற்காகவும், புதிய நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு, மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற 16-வது மாநிலத் தேர்தலில், தேசிய முன்னணிக்கு, நெகிரி செம்பிலான் மாநில மக்கள் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்.
மக்களின் அந்த ஆதரவைப் பெற்ற தேசிய முன்னணி கூட்டணிக்கு , தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஃபேஸ்புக் பதிவொன்றில், பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் தெரிவித்துக் கொண்டார்.
"கடந்த எட்டு ஆண்டுகளாக பக்காத்தான் ஹரப்பானுக்கும், முதலமைச்சராக டத்தோஸ்ரீ உத்தாமா அமினுடின் ஹாரூனுக்கும் நெகிரி செம்பிலான் மக்கள் வழங்கிய நம்பிக்கைக்கு எனது நன்றிகள்.
அக்காலகட்டத்தில், நல்லாட்சி, நிலைத்தன்மை, மக்களுக்குப் பயனளிக்கும் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ஹராப்பான் ஒரு சிறந்த நிர்வாகத்தை விட்டுச் சென்றுள்ளது," என்று அன்வார் கூறினார்.
நேற்று நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், 36 சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி 18 தொகுதிகளை வென்றது.
தேசிய முன்னணி, பெரிக்காத்தான் நெஷனல் வென்ற 7 தொகுதிகளுடன், மொத்தம் 25 சட்டமன்றங்களுடன் அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்ப்தாக தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.






