இலவச நீர் திட்டத்தைத் தொடரும் சிலாங்கூர்; RM20 மில்லியன் நிதிச் செலவை ஏற்கிறது

13 நவம்பர் 2026, 9:53 AM
இலவச நீர் திட்டத்தைத் தொடரும் சிலாங்கூர்; RM20 மில்லியன் நிதிச் செலவை ஏற்கிறது

ஷா ஆலாம், நவ 13 : சிலாங்கூரின் இலவச நீர் உதவித் திட்டமான 'ஸ்கிம் ஆயர் டாருல் எஹ்சான்' (SADE) அடுத்த ஆண்டும் தொடரும்.

இதற்கான 2 கோடி ரிங்கிட் நிதிச் செலவை மாநில அரசாங்கம் ஏற்கும் நிலையில், எஞ்சிய தொகையை ' ஆயர் சிலாங்கூர்' நிறுவனம் (Air Selangor) ஏற்கும்.

கடந்த செப்டம்பர் மாதம் வரை, இத்திட்டத்தின் மூலம் 3 லட்சத்து 73,366 பேர், மாதந்தோறும் 20 கன மீட்டர் இலவச நீரைப் பெற்றுப் பயனடைந்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

"குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் மாநில அரசாங்கம், ஸ்கிம் ஆயர் டாருல் எஹ்சான் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

இதன் மூலம் மாதம் 6,000 ரிங்கிட்டுக்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு முதல் 20 கன மீட்டர் நீர் இலவசமாக வழங்கப்படுகிறது," என்று அவர் கூறினார்.

2027 சிலாங்கூர் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல், ஸ்கிம் ஆயர் டாருல் எஹ்சான் திட்டத்துக்கு தகுதி பெறுவதற்கான குடும்ப வருமான வரம்பு RM5,000-லிருந்து RM6,000-ஆக உயர்த்தப்படுவதாக அமிருடின் அறிவித்திருந்தார்.

இதன் மூலம் தகுதி பெறும் ஒவ்வொருவரும் முதல் 20 கன மீட்டர் நீருக்கான கட்டணத் தள்ளுபடியைப் பெறுகின்றனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.