சிலாங்கூரில் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான முறையான பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்படும்

11 நவம்பர் 2026, 7:59 AM
சிலாங்கூரில் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான முறையான பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்படும்
சிலாங்கூரில் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான முறையான பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்படும்

ஷா ஆலாம், நவ 11 : தொழிற்பயிற்சி (Internship) செய்யும் மாணவர்களுக்கு 1,500 ரிங்கிட் வரை உதவித்தொகை வழங்கும் முறையான தொழிற்பயிற்சி திட்டத்தை சிலாங்கூர் அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், மாணவர்களின் படிப்புத் துறைக்கு ஏற்ற பொருத்தமான நடைமுறைப் பயிற்சிகளை வழங்கும்.

இன்று நடைபெற்ற, சிலாங்கூர் கல்வி உச்சநிலை மாநாட்டில் அமிருடின் ஷாரி உரையாற்றினார்.

படம் : மீடியா சிலாங்கூர்

தொழிற்பயிற்சி என்பது காபி தயாரிப்பது, உபகரணங்களை அடுக்குவது அல்லது துறைத் தலைவர்களுடன் உடன் சென்று வருவது போன்றதாக மட்டும் இருக்கக் கூடாது ; மாணவர்களுக்குத் தகுந்த வேலை அனுபவத்தை வழங்கும் முறையான பயிற்சியை வழங்கவே தாங்கள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முயற்சி கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைத் தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இவ்வாரம் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள 2027-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் , புதிய செயற்கை நுண்ணறிவு (AI) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.