கோலா குபு பாரு திடீர் வெள்ளப் பெருக்கு: 3 வெளிநாட்டினரைத் தேடும் பணி தீவிரம்

11 நவம்பர் 2026, 3:12 AM
கோலா குபு பாரு திடீர் வெள்ளப் பெருக்கு:  3 வெளிநாட்டினரைத் தேடும் பணி தீவிரம்
கோலா குபு பாரு திடீர் வெள்ளப் பெருக்கு:  3 வெளிநாட்டினரைத் தேடும் பணி தீவிரம்

உலு சிலாங்கூர், நவ 11 : கோலா குபு பாரு, பெர்தாக் பூர்வீகக் குடி கிராமம், சுங்கை பெர்தாக் சுற்றுலாத் தளம் அருகில் உள்ள சுங்கை லூயிட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் (kepala air) சிக்கி காணாமல் போன 3 வெளிநாட்டு ஆடவர்களைத் தேடி மீட்கும் பணி இன்று காலை மீண்டும் தொடங்கியது.

தேடுதல் பணி தற்போது பெர்தாக் பாலம் மற்றும் சுங்கை சிலாங்கூர் அணைப் பகுதிகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத்துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் அஷ்ருல் ரீசால் அஸ்பார் தெரிவித்தார்.

நேற்று இரவு தேடுதல் பணி நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும், நீர்ப்பரப்பு பகுதியில் தொடர்ந்து தேடப்பட்டதாகவும், இன்று காலை 7 மணி முதலே முக்குளிப்பாளர்கள் தங்களது பணியைத் தொடங்கிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தேடுதல் பணியில் படகுகளுடன், K9 மோப்ப நாய் பிரிவு, மற்றும் மலேசியாவின் சிறப்பு மீட்புக் குழுவினர் (STORM) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, இன்னும் கண்டுபிடிக்கப்படாத மூன்று நபர்களில் ஒருவர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர், மற்ற இருவர் இந்திய நாட்டவர்கள் ஆவர்.

இதுவரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாகவே நீடிக்கிறது.

முன்தினம் மாலை 5.30 மணியளவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எட்டு ஆண்களில் ஐந்து பேர் இறந்துவிட்டதாக முன்பே செய்திகள் வெளியாகி இருந்தன.

வி.விஜயன் என்ற 36 வயது உள்ளூர் ஆடவரின் உடல், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் பெர்தாக் பாலம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

மற்ற நான்கு பேரின் உடல்களும் நேற்று காலையிலேயே வெவ்வேறு பாலங்களுக்கு அருகே மீட்கப்பட்டன.

அவர்களில் கபாலி (வயது 49, நேபாளம்), குஞ்சன்மலையில் பாஸ்கரன் (வயது 35, இந்தியா) மற்றும் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்த அசம்பாவத்தின்போது நான்கு குழுக்களைச் சேர்ந்த 34 பேர் அங்கு இருந்தனர்.

அவர்களில் 8 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீதமுள்ள 26 பேர் தாங்களாகவே தப்பினர் அல்லது தீயணைப்பு வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.