செப்பாங்கில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு

9 நவம்பர் 2026, 10:22 AM
செப்பாங்கில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு

செப்பாங், நவ 9 : சிலாங்கூர், செப்பாங்,பண்டார் பாரு சாலாக் திங்கி பகுதியில் இன்று மாலையில் மின்னல் தாக்கியதில் மூவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

இந்தத் துயரச் சம்பவத்தை செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர், அசிஸ்டென்ட் கமிஷனர் நோர்ஹிசாம் பஹாமன் உறுதிப்படுத்தினார்.

இன்று மாலையில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது உண்மைதான் என்றும், இது குறித்தான கூடுதல் மற்றும் விரிவான விவரங்களை போலீஸ் பின்னர் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, இச்சம்பவம் தொடர்பான சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த காணொளிகளில், ஒரு மரத்தின் அடியில் மூன்று உடல்கள் படுக்க வைக்கப்பட்ட நிலையில், அவை பாத்திக் துணியால் (Kain Batik) மூடப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இருப்பினும், உயிரிழந்தவர்களின் அடையாளம் மற்றும் இந்தச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்த முழுமையான விவரங்களை அதிகாரிகள் இதுவரை விரிவாக வெளியிடவில்லை.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.