தீபாவளிப் பண்டிகை காலத்தில் நெடுஞ்சாலைகளில் தினசரி 3.28 மில்லியன் வாகனங்கள் பயணிக்கும்

5 நவம்பர் 2026, 5:08 AM
தீபாவளிப் பண்டிகை காலத்தில் நெடுஞ்சாலைகளில் தினசரி 3.28 மில்லியன் வாகனங்கள்  பயணிக்கும்

ஷா ஆலாம், நவ 5 : தீபாவளிப் பண்டிகையின் பரபரப்பான பயண நாட்களின் போது, நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் தினசரி சுமார் 32 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போக்குவரத்து நெரிசல் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 5) முதலே அதிகரிக்கத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

தீபகற்பத்தின் கிழக்குக்கரை, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளில் வழக்கத்தை விடவும் போக்குவரத்து மிக அதிகமாக இருக்குமென மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் (LLM) தலைமை இயக்குனர் முகமட் ஹட்ஸ்மிர் யுசோஃப் தெரிவித்தார்.

குறிப்பாக, பிளஸ் (PLUS) நெடுஞ்சாலையில் 22 லட்சத்து 40,000 வாகனங்களும், டியூக் (DUKE) நெடுஞ்சாலையில் 288,000 வாகனங்களும், கோலாலம்பூர்-காராக் (KLK) நெடுஞ்சாலையில் 190,000 வாகனங்களும், மேற்குக்கரை நெடுஞ்சாலையில் (WCE) 168,000 வாகனங்களும் பயணிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களின் பாதுகாப்பான மற்றும் சுமூகமான பயணத்தை உறுதி செய்ய, அவசரப் பழுதுபார்ப்புப் பணிகளைத் தவிர, சாலை வழி அடைப்புகளை உள்ளடக்கிய இதர பராமரிப்புப் பணிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6 முதல் 10 வரை) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.

மேலும், பிளஸ் நெடுஞ்சாலையின் 30 இடங்களில் ஸ்மார்ட் லேன்கள் (Smart Lanes) செயல்பாட்டிற்கு வரும்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க குறிப்பிட்ட சாலைக் கட்டண சாவடிகளில் கூடுதல் வழிகள் திறக்கப்படும் என்பதுடன், R&R ஓய்வுவெடுக்கும் பகுதிகளில் கூடுதல் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் நடமாடும் கழிப்பறைகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

வாகனமோட்டிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு MyPLUS-TTA செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன், நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு 1-800-88-7752 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.