சட்டவிரோத தளங்கள் மீது அதிரடி சோதனை; 390 பிட்காயின் இயந்திரங்கள் பறிமுதல்

26 அக்டோபர் 2026, 4:31 AM
சட்டவிரோத தளங்கள் மீது அதிரடி சோதனை; 390 பிட்காயின் இயந்திரங்கள் பறிமுதல்
சட்டவிரோத தளங்கள் மீது அதிரடி சோதனை; 390 பிட்காயின் இயந்திரங்கள் பறிமுதல்
சட்டவிரோத தளங்கள் மீது அதிரடி சோதனை; 390 பிட்காயின் இயந்திரங்கள் பறிமுதல்
சட்டவிரோத தளங்கள் மீது அதிரடி சோதனை; 390 பிட்காயின் இயந்திரங்கள் பறிமுதல்

ஷா ஆலம், அக் 26: பெஸ்தாரி ஜெயா, பிபி தொழில்நுட்ப தொழிற்துறை பூங்காவில் (Taman Perindustrian Teknologi BB) உரிமம் இன்றி இயங்கி வந்த நெகிழி மறுசுழற்சி தொழிற்சாலை மற்றும் மூன்று பிட்காயின் (Bitcoin) இயந்திர தளங்கள் மீது கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அதிரடி சோதனை நடத்தியது.

பொதுமக்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்பின் அடிப்படையில் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

இதில் நெகிழி மறுசுழற்சி தளமும், மின்சார மீட்டரில் முறைகேடு செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்ட மூன்று பிட்காயின் தளங்களும் சோதனையிடப்பட்டன.

இந்த கூட்டுச் சோதனையில் நகராண்மைக் கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், சுற்றுச்சூழல் துறை, தெனாகா நேஷனல் நிறுவனம், கோலா சிலாங்கூர் மாவட்ட நில அலுவலகம் மற்றும் சிலாங்கூர் நீர் நிர்வகிப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 58 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

"இந்த அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து நான்கு தளங்கள் மூடப்பட்டன; 11 அபராதங்களும் 10 எச்சரிக்கை கடிதங்களும் வழங்கப்பட்டன.

மேலும் நான்கு சொத்து பறிமுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கையில் 390 பிட்காயின் இயந்திர யூனிட்களும், அதனுடன் தொடர்புடைய பிற உபகரணங்களும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன," என்று கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

"தனது நிர்வாக எல்லைக்குள் அனுமதியின்றி செயல்படும் வர்த்தக நடவடிக்கைகளைக் கையாள்வதோடு, நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும்," என்று அக்கழகம் தெரிவித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.