இந்தோனேசிய நீரிணையில் சிக்கிய மலேசிய கப்பல்; போதைப் பொருள் கும்பல் அடையாளம்

25 அக்டோபர் 2026, 10:30 AM
இந்தோனேசிய நீரிணையில் சிக்கிய மலேசிய கப்பல்; போதைப் பொருள் கும்பல் அடையாளம்

புத்ராஜெயா, அக் 25: அண்மையில் இந்தோனேசிய நீரிணைப் பகுதியில் மலேசிய நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1.16 டன் கெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் முயற்சி தொடர்பாக, சில நபர்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து போலீசார் முழுமையாகத் தெரிந்து வைத்துள்ளதாகவும், இன்று அல்லது நாளைக்குள் அவர்களைக் கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , தேசிய போலீஸ் படையின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்தக் கப்பல் ஜோகூரின் பாசிர் கூடாங்கில் இருந்து, சிலாங்கூர் கிள்ளான் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிய பின்னர், அந்தமான் கடல் பகுதிக்குச் சென்று அங்கிருந்த மற்றொரு வெளிநாட்டுக் கப்பலுடன் போதைப்பொருள் பரிமாற்றத்தை செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி , இந்தோனேசியாவின் வட சுமத்ரா, தஞ்சோங் பாலாய் அசாஹான் கடற்பகுதியில் இந்தோனேசிய அதிகாரிகள் அக்கப்பலை மடக்கிப் பிடித்து, அதில் இருந்த 8 மாலுமிகளைக் கைது செய்தனர்.

கப்பலில் 58 சாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கெட்டமைன் போதைப்பொருளின் அனைத்துலக சந்தை மதிப்பு சுமார் 800 மில்லியன் மலேசிய ரிங்கிட் ஆகும்.

MT Global 168 என மங்கோலியாவில் பதிவு பெற்ற அந்த கப்பல் மலேசியர்களுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.