மலாக்காவில் மூன்று இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்; குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆடியோ கிடைத்தது - ஐ.ஜி.பி. உறுதி

8 டிசம்பர் 2025, 6:32 AM
மலாக்காவில் மூன்று இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்; குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆடியோ கிடைத்தது - ஐ.ஜி.பி. உறுதி

கோலாலம்பூர், டிச 8- மலாக்காவில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து போலிசாருக்கு ஆடியோ கிடைத்தது.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் இதனை தெரிவித்தார்.மலாக்கா டுரியான் துங்காலில் அண்மையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒப்படைத்த ஒரு குறுந்தகடு (சிடி) போலிசாருக்குக் கிடைத்துள்ளது.

சம்பவத்திற்கு முன்பு சந்தேக நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ பதிவு அந்த சிடியில் இருப்பதாக நம்பப்படுகிறது.

முன்னதாக குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி புக்கிட் அமான் மட்டத்தில் ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள ஒரு மூத்த அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தார்.

அக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.