RM2,501-RM3,000 சம்பளம் பெறும் பட்டதாரிகளுக்கு PTPTN புதிய தளர்வு: மாதம் RM50 மட்டும் திருப்பி செலுத்தலாம்

24 அக்டோபர் 2026, 1:47 AM
RM2,501-RM3,000 சம்பளம் பெறும் பட்டதாரிகளுக்கு PTPTN புதிய தளர்வு: மாதம் RM50 மட்டும் திருப்பி செலுத்தலாம்

கோலாலம்பூர், அக் 42: 2027 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தளர்வின்படி, மாதம் 2,501 ரிங்கிட் முதல் 3,000 ரிங்கிட் வரை வருமானம் ஈட்டும் பட்டதாரிகள், தங்களது தேசிய உயர் கல்வி கடனை (PTPTN) மாதத்திற்கு மிகக் குறைந்தபட்சமாக 50 ரிங்கிட் மட்டும் செலுத்தினால் போதுமானது.

புதிய பட்டதாரிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாக உயர்கல்வி துணை அமைச்சர் ஆடம் அட்லி அப்துல் ஹலிம் தெரிவித்தார்.

இதன் வழி 4 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மாதம் 2,500 ரிங்கிட்டுக்கும் குறைவாக வருமானம் பெறும் பட்டதாரிகள், தங்களின் வருமானம் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டும் வரை இந்தக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டியதில்லை என துணையமைச்சர் கூறினார்.

உள்ளூர் வானொலி நிலையம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், மாணவர்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, உயர் கல்வி கூட வளாகங்களுக்குள் இயங்கும் 'Dapur Siswa MADANI' சமையல் திட்டம் அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக கூறினார்.

இதற்கென 2 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் அரிசி, சமையல் எண்ணெய், முட்டை , சார்டின் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மாணவர்களின் சமையல் தேவைகளுக்காக சமையலறைகளுக்கு விநியோகிக்கப்படும்.

மாணவர்கள் இந்த உணவுப் பொருட்களைக் கொண்டு தனித்தோ அல்லது குழுவாகவோ சமைத்து உண்பதன் மூலம் தங்களின் உணவுக்கான செலவைப் பெருமளவில் மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.