PTPTN கடன் நிலுவை RM10.7 பில்லியனாக அதிகரிப்பு; 1.16 மில்லியன் கடனாளிகள்

6 அக்டோபர் 2026, 3:30 AM
PTPTN கடன் நிலுவை RM10.7 பில்லியனாக அதிகரிப்பு; 1.16 மில்லியன் கடனாளிகள்

கோலாலம்பூர், அக். 6 — தேசிய உயர்கல்விக் கடன் நிதிக் கழகமான PTPTN-க்கு செலுத்தப்பட வேண்டிய கடன் நிலுவை தொகை, இவ்வாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி 10.7 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.

இந்த நிலுவைத் தொகை மொத்தம் 11 லட்சத்து 60 ஆயிரம் கடனாளிகளை உள்ளடக்கியுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்தது.

கடன் நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சு தெளிவுப்படுத்தியது.

குறிப்பாக, PTPTN-ன் நிதி நிலைத்தன்மைக்கு ஏற்ப, உண்மையில் கடன் உதவி தேவைப்படுபவர்களை மேலும் துல்லியமாக இலக்காகக் கொண்டு, கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதனிடையே, தங்களது நிதி நிலைமைக்கு ஏற்ப கடன் திருப்பிச் செலுத்தும் முறையை மறுசீரமைக்க விரும்பும் கடனாளிகள் PTPTN-ஐ அணுகி ஆலோசனை பெறலாம் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடனாளிகளின் நிதித் திறனுக்கு ஏற்ப மாதாந்திரத் தவணை முறையை மாற்றியமைப்பது அல்லது கடன் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைப்பது தொடர்பான கோரிக்கைகளையும் PTPTN பரிசீலித்து வருகிறது.

இவை கழகம் வழங்கும் நெகிழ்வுத் தன்மைக்கு உட்பட்டவை என்றும் உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.