கோலாலம்பூர், அக் 10 - நேபாள வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மலேசியக் குடும்பங்களுக்கும், கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டம் விரிவுபடுத்தப்-பட்டுள்ளதாக பெங்க் நெகாரா மலேசிய மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய வங்கி இந்தத் தகவலைத் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 12 -ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருடன் மத்திய வங்கி சந்திப்பை நடத்தியது.
அதைத் தொடர்ந்து,சம்பந்தப்பட்ட வங்கிகள், காப்பீடு மற்றும் தகாஃபுல் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து குறிப்பிட்ட சில கட்டணங்கள் மற்றும் வசூல்களிலிருந்து விலக்கு அளித்தல், வாடிக்கையாளர்களின் சொத்துகள் மற்றும் வைப்புத்தொகைகளைப் பாதுகாத்தல் மற்றும் காப்பீடு, தகாஃபுல் இழப்பீட்டுத் கோரிக்கைகளை எளிமையாக்குதல் போன்ற கூடுதல் உதவிகளையும் நிதி நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
எனவே, இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களின் சம்பந்தப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசுமாறு மத்திய வங்கி ஊக்குவித்துள்ளது.
மேலும் கூடுதல் உதவி அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால், அவர்கள் தங்களின் நிதி நிறுவனங்களை நாடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மலேசிய மத்திய வங்கியும் நிதித் துறையும் தற்போதைய சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.







